Tuesday 21 November 2017

வாங் லிவெய் - கை இழந்தும் தன்னம்பிக்கையால் வாழ்வில் வெற்றி பெற்றவர்

டக்கு சீனாவின் ஹெபாய் மாகாணத்தில் உள்ள யுடியன் நகரத்தில் வசிப்பவர் 33 வயதான வாங் லிவெய். தனது 21 வது வயதில் ஒரு விபத்தில் தன் ஒரு கையை பறிகொடுத்துள்ளார். உடல் ஊனமுற்ற இவருக்கு யாரும் வேலை கொடுக்க மறுத்து விட்டனர், வேலை தேடி தேடி சோர்ந்து போன இவர் ஒரு கட்டத்தில் தன் தந்தையுடன் சேர்ந்து ஒரு சிறிய ஆட்டோ காரேஜ்  துவக்கி உள்ளார். 



காலையில் ஆட்டோ காரேஜில் வேலையை துவங்கும் இவர் பழுதடைந்து வரும் கார், வேன், லாரி இவற்றின் டயர் மாற்றுவது துவங்கி எல்லா வேலைகளையும் ஒற்றை கையை  கொண்டே செய்து முடிக்கிறார். படிப்படியாக தொழிலில் முன்னேறி, இப்போது இவருடைய மாத வருமானம் பத்தாயிரம் ஆர்எம்பி. 



நம் நாட்டில் இரண்டு கைகளும் நன்றாய் இருந்தாலும் சிலர் எந்த வேலைக்கும் போகாமல் காலத்தை வீணடிக்கின்றனர், ஆனால், ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் ஒற்றை கையுடன் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றுள்ளார்.  இன்றைக்கு படித்து முடித்து விட்டு தகுந்த வேலை கிடைக்கவில்லை, வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொல்லி பொழுதை வீணடிக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் ஒரு சிலருக்கு  இவரது வாழ்க்கை ஒரு பாடம்.  
--------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்