Tuesday 30 January 2018

ப்ளூம்பாக்ஸ் - இயற்கை மின்சாரம் தயாரித்து அமெரிக்காவை அசத்திய தமிழர் கே ஆர் ஸ்ரீதர்


மிழகத்தை சேர்ந்த கே ஆர் ஸ்ரீதர் அமெரிக்காவில் இயற்கை மின்சாரம் தயாரித்து அந்த நாட்டினரை அசத்தியுள்ளார். 1982ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள என்ஐடியில் எந்திரவியல் பொறியாளர் பட்டம் பெற்ற கே ஆர் ஸ்ரீதர், அமெரிக்கா சென்று அங்குள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து 1989ஆம் ஆண்டு அணுசக்தி துறையில் எம் எஸ் பட்டமும், எந்திரவியல் துறையில் பிஹச்டி பட்டமும் பெற்றார். 

முதலில் கே ஆர் ஸ்ரீதர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகம் செல்லும் போது அங்கு அவர்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் தயாரிக்கும் கருவியை வெற்றிகரமாக உருவாக்கியவர், ஆனால் நாசா நிறுவனம் அந்த திட்டத்தை கைவிட்ட பின், ஆக்சிஜன் தயாரிக்கும் கருவியை உருவாக்கிய விஞ்ஞானி ஸ்ரீதர் அந்த திட்டத்தை அப்படியே தலைகீழாக வேறு முறையில் பயன்படுத்த முடியுமா என்று சிந்தித்து உருவாக்கியது தான் ப்ளூம்பாக்ஸ் - இயற்கை மின்சாரம் தயாரிக்கும் பெட்டி.

இயற்கை மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கையில் இருந்தாலும் அதை வெற்றிகரமாக உருவாக்கி  விற்பனை செய்வதற்கு நூறு மில்லியன் டாலர்கள் நிதி தேவைபட்டிருக்கிறது, அந்த நேரத்தில் ஸ்ரீதரின் இயற்கை மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு நிதி அளித்து ஊக்கம் கொடுத்து உதவி இருக்கிறார் ஜான் டூர், இவர் ஏற்கெனவே வெற்றிகரமாக இயங்கி வரும் பல இளம் முதலீட்டாளர்களுக்கு நிதி உதவி அளித்து இருக்கிறார். ஜான் டூர் உதவியோடு எட்டு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பின்னர் தயாரானது ப்ளூம்பாக்ஸ் - இயற்கை மின்சாரம் தயாரிக்கும் பெட்டி.

ப்ளூம்பாக்ஸ் பெட்டியில் என்ன இருக்கிறது? எப்படி மின்சாரம் தயாரிக்கிறது? 

பீச் சான்ட் - கடற்கரை மணல் கொண்டு உருவாக்கப்பட்ட செராமிக் தட்டுகள். இந்த தட்டின் ஒரு பக்கம் பச்சை நிற திரவம் தடவப்பட்டுள்ளது, மறுபக்கம் கருப்பு நிற திரவம் தடவப்பட்டுள்ளது. இந்த வரிசையாக அடுக்கபட்டிருக்கும் இந்த தட்டுகளின் மேல் ஒரு புறத்தில் இருந்து ஆக்சிஜனும், மறுபறத்தில் இருந்து இயற்கை எரிவாயுவும் செலுத்தப்படும்போது ஏற்படும் மாற்றங்களால்   மின்சாரம் உருவாகி வெளிவருகிறது. (பச்சை மற்றும் கருப்பு நிற திரவங்கள் ரகசிய பார்முலா கொண்டு தயாரிக்கப்படுகிறது) இயற்கை எரிவாயுக்கு பதில் சூரிய ஒளியை கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

ஸ்ரீதரின் பேட்டி பாகம் - 1 


நாள்தோறும் பல கண்டுபிடிப்புகள் வெளிவருகின்றன, அதில் சில போலியாகவும் இருக்கிறது, இந்த புதிய கண்டுபிடிப்பை நாம் எப்படி நம்புவது என்ற கேள்வி பலர் மனதில் எழுந்தது, ஆனால் அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி  வைக்கும் வகையில் இன்டர்நெட் உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கூகுள் நிறுவனம் இவரது ப்ளூம்பாக்ஸ் மின்சாரம் தயாரிக்கும் பெட்டிகளை வாங்கி சில வருடங்களாக பயன்படுத்தி வருகிறது, கூகுளை தொடர்ந்து சர்வதேச கொரியர் நிறுவனமான ஃபெடெக்ஸ், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஈ பே என்று பல வணிக நிறுவனங்கள் ப்ளூம் பாக்ஸ் பெட்டிகளை நிறுவி தங்கள் அலுவலகங்களில் இயற்கை மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்த துவங்கி விட்டன. இதனால் அவர்களது மின்சார கட்டணத்தில் பல கோடி டாலர்கள் சேமிக்கபடுகிறது.    

ஸ்ரீதரின் பேட்டி பாகம் - 2 


அமெரிக்க மக்கள் பலரது வீடுகளில் இந்த ப்ளூம்பாக்ஸ் பெட்டி இடம் பிடித்து விடும் என்கிறார்கள். கணிணி விற்பனைக்கு வந்த ஆரம்ப காலத்தில் அதன் விலை சாதாரண மக்கள் வாங்கும் நிலையில் இல்லை ஆனால் காலபோக்கில் கணிணி சாதாரண மக்கள் எல்லோரும் வாங்கும் அளவுக்கு விலை குறைந்து விட்டதை சுட்டி காட்டும் ஸ்ரீதர், மக்கள் அதிகளவில் இந்த மின்சாரம் தயாரிக்கும் பெட்டியை வாங்கி பயன்படுத்தும்போது விரைவில் இந்த பெட்டியின் விலையை 3000 டாலருக்கு கொடுக்க முடியும் என்று நம்புகிறார்.

------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்