Wednesday 25 April 2018

இளைஞர்களை அசத்த கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை


வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் கூகுள் தேடுதல் இயந்திரம் செய்தி காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் இளைஞர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.  

------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 5 April 2018

இளைய தலைமுறையை கவரும் எல்இடி விளக்குகள் ஒளிரும் ஸ்மார்ட் டி-ஷர்ட்



க்கால இளைஞர்கள் எல்லா விஷயங்களிலும் புதுமையை விரும்புகின்றனர், அவர்கள் விருப்பத்தை புரிந்து கொண்டு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் வெற்றி அடைகின்றன, பல கல்லூரிகளில், சில அலுவலகங்களிலும் கூட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டி- ஷர்ட்கள் அணிய தடை உள்ளது, அப்படி தடை செய்திருந்தாலும் இந்த டி ஷர்ட் அணிந்து சென்றால் எந்த பிரச்சினையும் வராது, ஏனென்றால் இந்த டி சர்ட்டில் எழுத்துக்கள் பதிப்பிக்க படுவதில்லை மாறாக நாம் விரும்பும் போது டி ஷர்ட்டில் உள்ள லோகோவை அழுத்தினால் எழுத்துகள், ஓவியங்கள், உருவங்கள் எல்இடி விளக்குகள் கொண்டு ஒளிர்கிறது. அதே சமயம் இந்த டி ஷர்ட்டில் நாம் விருப்பதிற்கேற்ப எழுத்துக்கள், ஸ்லோகன்கள், அனிமேஷன் உருவங்கள் போன்றவற்றை எழுதியும், வரைந்தும் பயன்படுத்தும் வசதி உள்ளது.


ஹைதராபாத் நகரை சேர்ந்த பிராட்காஸ்ட் என்ற நிறுவனம் இந்த எல்இடி விளக்குகள் ஒளிரும் டி- ஷர்ட்களை தயாரித்துள்ளது. ஒரு மின்னணு சர்க்யூட்போர்ட், மிக சிறிய எஸ்.எம்.டி வகை எல்இடி விளக்குகள், ரீசார்ஜ் செய்து பயன்படுத்தகூடிய பேட்டரி இவற்றுடன் உங்கள் ஸ்மார்ட்போனுடன் தொடர்பு கொள்வதற்கு ப்ளூடூத் சிப் போன்றவை தான் இந்த டி ஷர்ட்களை ஒளிர செய்கிறது. சாதாரண எல்இடி விளக்குகள் கணம் அதிகமாய் இருக்குமென்பதால் மிக சிறிய அதிக கணமில்லாத எஸ்.எம்.டி வகை எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. டி ஷர்ட் துணியில் இந்த மின்னணு சர்க்யூட் போர்ட் மற்றும் எல்இடி விளக்குகள் ஒரு விசேஷமான ரசாயண கலவையுடன் சேர்த்து சால்டர் செய்து இணைக்கப்பட்டுள்ளது. ஆறு மணி நேரம் வரை எல்இடி விளக்குகள் ஒளிரும் வகையில் 1500 எம்ஏஹச் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. ஒரு டி ஷர்ட்டில் சராசரியாக 8௦௦ எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது. 
  


எல்இடி விளக்குகள் ஒளிரும் இந்த டி ஷர்ட்டை அணிந்து கொண்டு தண்ணீரில் நனைந்தாலும் கவலைப்பட தேவையில்லை. வாட்டர் ப்ரூப் கொண்டுள்ளது. ஒரு சாதாரண டி ஷர்ட்டை எப்படி பயன்படுத்துவீர்களோ, அதே போல் இந்த ஸ்மார்ட்  டி-ஷர்ட்டையும் பயன்படுத்தலாம்.  

எப்படி பயன்படுத்துவது?
உங்கள் ஸ்மார்ட் போனில் இலவசமாக கிடைக்கும் பிராட்காஸ்ட் வியர் (ஆப்) செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவி கொள்ளவும். ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள செயலியை டி ஷர்ட்டுடன் இணைக்கவும், பின்னர் நீங்கள் விரும்பும் எழுத்துக்கள் வடிவங்களை ஸ்மார்ட்போன் செயலியில் எழுதினாலும், வரைந்தாலும் அது அப்படியே டி சர்ட்டில் உள்ள எல்இடி விளக்குகள் மூலம் ஒளிரும். 

தினமும் ஒரே வாசகம் எழுதப்பட்ட டி சர்ட்டை அணிந்தால் போரடிக்கும் என்று நினைப்பவர்கள், இந்த ஸ்மார்ட் எல்இடி டி சர்ட்டில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பும் வாசகத்தை எழுதி பயன்படுத்தலாம் என்கிறார் பிராட்காஸ்ட் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஐயப்பா நகுபந்தி.          

இளைய தலைமுறையினரிடம் ஸ்மார்ட் எல்இடி டி ஷர்ட்டிற்கு கிடைத்த வரவேற்ப்பை பார்த்து,   தற்போது    இந்த    நிறுவனம்     தங்களது    அடுத்த  தயாரிப்பான ஃபிட்னஸ் டி- ஷர்ட் தயாரித்து விற்பனை செய்ய துவங்கியுள்ளது. 

------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 29 March 2018

கல்லூரியில் பட்டம் பெற்ற பின் தந்தையை கவுரவித்த இளம்பெண்


ள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்/மாணவிகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர் உயர்ந்த வேலைகளில்/பதவிகளில் (டாக்டர், இன்ஜினியர், கல்லூரி பேராசிரியர்...) இருந்தால் அதை பெருமையாக தங்கள் சக மாணவர்கள், நண்பர்களிடம் சொல்லி பெருமைப்படுவார்கள். ஆனால், பெற்றோர் சாதாரண வேலையில் இருந்தால் அதை தங்கள் சக மாணவர்கள், நண்பர்களிடம் சொல்லாமல் மறைக்கவே முயல்வார்கள்.


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைவதற்காக எவ்வளவோ தியாகங்களை செய்திருப்பார்கள், ஆனால், அவர்கள் யாருக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்கிறார்களோ அவர்களின் பிள்ளைகளோ உயர்ந்த நிலைக்கு வந்தவுடன் பெற்றோர் செய்த தியாகங்களை மறந்து அவர்களை வீட்டில் கூட வைத்து கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் விட்டு விடுகிறார்கள். சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை எந்த காலத்திலும் மறவாமல் அவர்களை அன்போடு கவனித்து கொள்கின்றனர். 



இன்று நாம் பார்க்கபோகும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பட்டதாரியான மைலின் ஸ்குயில்டோ அகாய் அப்படிப்பட்ட ஒருவர் தான். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுல்தான் குடரத் மாநில பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ள மைலினின் தந்தை மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர். வீட்டில் வறுமை கோர தாண்டவமாடி இருக்கிறது. அவர்கள் குடியிருந்த வீடு ஒரு முறை தீ பற்றி எரிந்து சேதமானதில், மழை பெய்தால் வீட்டுக்குள் தண்ணீர் வந்து விடும்.



வறுமை தொடர்ந்து அவர்கள் குடும்பத்தை வாட்டி வதைத்ததில் ஒரு முறை நோய்வாய்ப்பட்டிருந்த மைலினின் மூத்த சகோதரனுக்கு மருத்துவமனையில் சேர்த்து தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் போனதால் அவர் இறந்து போனார். வறுமையினால் வந்த கடும் இழப்புகளுக்கு மத்தியிலும் மைலினின் தந்தை நம்பிக்கை இழக்காமல் தன் குடும்பத்தை காப்பற்றவும், மகளை படிக்க வைப்பதற்காகவும் தொடர்ந்து மூட்டை தூக்கும் வேலைக்கு பல வருடங்களாக சென்றுள்ளார். 

Mailyn Esquelito Akoy

Sila: "Papa ko, Pulis!" "Papa ko, Seaman!" "Papa ko, Doctor!" "Papa ko, Teacher!" Ako? "Papa ko, Kargador." Oo, anak ako ng isang Kargador. Pasan dito, pasan doon, yan ang araw-araw na ginagawa ng...

இப்போது, மைலின் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்று விட்டார், தான் பட்டதாரி ஆக காரணமான தன் தந்தையை பெருமைப்படுத்தும் விதத்தில் அவரை புகழ்ந்து ஒரு கவிதையும் எழுதியுள்ளார். பட்டம் பெற்ற பின், தன் தந்தையோடு அவர் இருக்கும் புகைப்படங்களை முகநூலில் பதிவிட அது இப்போது வைரல் ஆகி வருகிறது.       

Mailyn Esquelito Akoy

Mailyn Esquelito Akoy posted a video to her timeline.
------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 21 March 2018

சிறந்த பத்து வேலை வாய்ப்பு இணையதளங்களின் பட்டியல்


 இளைஞர் டைம்ஸ் யூ டியூப் சேனல்

வேலை தேடும் இளைய தலைமுறையினர்  அதிகமாக பயன்படுத்தும் சிறந்த பத்து வேலை வாய்ப்பு இணையதளங்களின் பட்டியல் காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் இளைஞர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.

------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 7 March 2018

வல்லவனுக்கு வல்லவன் - இளைஞனின் சாமர்த்தியம் - # உண்மை சம்பவம்


து ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட், வாடிக்கையாளர்கள் கண்களுக்கு பளிச்சென்று தெரியும் வகையில் வாங்கிய பொருட்களை திரும்ப பெற்று கொள்ளும் வசதி உண்டு என்று அங்கு இருந்த அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டுள்ளது. வீட்டிற்க்கு தேவையான பொருட்களை மொத்தமாக அங்கு வாங்கிய ஒரு இளைஞர் அடுத்த நாள் ஒரு சில பொருட்களை தேவையில்லை என்று திரும்ப கொடுத்து விட்டு செல்ல வந்திருந்தார், சூப்பர் மார்க்கெட்டின் கேஷ் கவுண்டரில் இருந்த நபரிடம் தான் நேற்று வாங்கிய சில பொருட்களை திரும்ப கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தார், ஆனால் சூப்பர் மார்க்கெட் ஊழியரோ நேற்று பொருளை வாங்கியிருந்தால் நீங்கள் நேற்றே பொருளை திரும்ப கொடுத்திருக்க வேண்டும், அப்போது தான் பொருட்களுக்கான பணம் திரும்ப தரப்படும் (இந்த விதிமுறை மிக சிறிய எழுத்துக்களில் அந்த சூப்பர் மார்க்கெட் அறிவிப்பு பலகையிலேயே உள்ளது, சிறிய எழுத்துக்களில் இந்த விதிமுறை உள்ளதால் பலரும் இதை கவனிக்க தவறி விடுகின்றனர்.)  

பொருட்களை வாங்கிய அடுத்த நாள்  பொருட்களை கொடுத்து திரும்ப பணம் பெற முடியாது, வேண்டுமென்றால் அந்த பொருட்களை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அதே பண மதிப்புக்கு வேறு பொருட்களை நீங்கள் வாங்கி கொள்ளலாம் என்று இளைஞரிடம் கூற, அந்த இளைஞர் சில நொடிகள் திகைத்து நின்று விட்டு பின்னர் சூப்பர் மார்க்கெட் ஊழியர் கூறியபடி முதல் நாள் வாங்கிய பொருட்களில் சிலவற்றை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு சில பொருட்களை வாங்கினார். அதன் பின்பு அந்த இளைஞர் சாமர்த்தியமாக ஒரு காரியம் செய்தார். அன்று தான் வாங்கிய பொருட்களை மீண்டும் திரும்ப கொடுத்து இப்போது பணம் கொடுங்கள் என்றார். சூப்பர் மார்க்கெட் ஊழியரின் முகத்தை பார்க்க வேண்டுமே, பொருட்கள் இன்று விற்பனை செய்யப்பட்டிருப்பதால் வேறு வழியின்றி பொருட்களை எடுத்து கொண்டு பணத்தை திரும்ப அந்த இளைஞரிடம் கொடுத்தார். வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு அல்லவா?  


------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 14 February 2018

காற்று மாசில் இருந்து மக்களை காப்பாற்ற நாசோ ஃபில்டர் தயாரித்த பிரதீக் ஷர்மா


டெல்லி ஐ ஐ டி பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினருடன் (மாணவர்களும், ஜவுளி துறையை சேர்ந்த பேராசிரியர்களும்)  இணைந்து பிரதீக் ஷர்மா தயாரித்த நாசோ ஃபில்டர் என்ற சுவாச வடிகட்டியை பற்றிய செய்தி காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் இளைஞர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 7 February 2018

செவ்வாய்க்கு வெற்றிகரமாக (ஃபால்கன் ஹெவி) ராக்கெட் அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்


புகைப்படம் & காணொளி காட்சி: ஸ்பேஸ் எக்ஸ் 
செவ்வாய்க்கு வெற்றிகரமாக (ஃபால்கன் ஹெவி) ராக்கெட் அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் செய்தி தொகுப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் இளைஞர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்