Thursday 29 March 2018

கல்லூரியில் பட்டம் பெற்ற பின் தந்தையை கவுரவித்த இளம்பெண்


ள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்/மாணவிகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர் உயர்ந்த வேலைகளில்/பதவிகளில் (டாக்டர், இன்ஜினியர், கல்லூரி பேராசிரியர்...) இருந்தால் அதை பெருமையாக தங்கள் சக மாணவர்கள், நண்பர்களிடம் சொல்லி பெருமைப்படுவார்கள். ஆனால், பெற்றோர் சாதாரண வேலையில் இருந்தால் அதை தங்கள் சக மாணவர்கள், நண்பர்களிடம் சொல்லாமல் மறைக்கவே முயல்வார்கள்.


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைவதற்காக எவ்வளவோ தியாகங்களை செய்திருப்பார்கள், ஆனால், அவர்கள் யாருக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்கிறார்களோ அவர்களின் பிள்ளைகளோ உயர்ந்த நிலைக்கு வந்தவுடன் பெற்றோர் செய்த தியாகங்களை மறந்து அவர்களை வீட்டில் கூட வைத்து கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் விட்டு விடுகிறார்கள். சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை எந்த காலத்திலும் மறவாமல் அவர்களை அன்போடு கவனித்து கொள்கின்றனர். 



இன்று நாம் பார்க்கபோகும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பட்டதாரியான மைலின் ஸ்குயில்டோ அகாய் அப்படிப்பட்ட ஒருவர் தான். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுல்தான் குடரத் மாநில பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ள மைலினின் தந்தை மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர். வீட்டில் வறுமை கோர தாண்டவமாடி இருக்கிறது. அவர்கள் குடியிருந்த வீடு ஒரு முறை தீ பற்றி எரிந்து சேதமானதில், மழை பெய்தால் வீட்டுக்குள் தண்ணீர் வந்து விடும்.



வறுமை தொடர்ந்து அவர்கள் குடும்பத்தை வாட்டி வதைத்ததில் ஒரு முறை நோய்வாய்ப்பட்டிருந்த மைலினின் மூத்த சகோதரனுக்கு மருத்துவமனையில் சேர்த்து தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் போனதால் அவர் இறந்து போனார். வறுமையினால் வந்த கடும் இழப்புகளுக்கு மத்தியிலும் மைலினின் தந்தை நம்பிக்கை இழக்காமல் தன் குடும்பத்தை காப்பற்றவும், மகளை படிக்க வைப்பதற்காகவும் தொடர்ந்து மூட்டை தூக்கும் வேலைக்கு பல வருடங்களாக சென்றுள்ளார். 

Mailyn Esquelito Akoy

Sila: "Papa ko, Pulis!" "Papa ko, Seaman!" "Papa ko, Doctor!" "Papa ko, Teacher!" Ako? "Papa ko, Kargador." Oo, anak ako ng isang Kargador. Pasan dito, pasan doon, yan ang araw-araw na ginagawa ng...

இப்போது, மைலின் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்று விட்டார், தான் பட்டதாரி ஆக காரணமான தன் தந்தையை பெருமைப்படுத்தும் விதத்தில் அவரை புகழ்ந்து ஒரு கவிதையும் எழுதியுள்ளார். பட்டம் பெற்ற பின், தன் தந்தையோடு அவர் இருக்கும் புகைப்படங்களை முகநூலில் பதிவிட அது இப்போது வைரல் ஆகி வருகிறது.       

Mailyn Esquelito Akoy

Mailyn Esquelito Akoy posted a video to her timeline.
------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்