வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் இளைஞர்கள் பலருக்கு சில நேரங்களில் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்கும்போது எடுத்த முயற்சிகளை எல்லாம் கைவிட்டு தோல்வியினால் சோர்ந்து போய் ஓய்ந்து விடுகிறார்கள். எவ்வளவு தோல்விகள் வந்தாலும் சளைக்காமல் தொடர்ந்து போராடி முயற்சி செய்து கொண்டே இருப்பவர்கள் தான் வெற்றி தரும் மகிழ்ச்சியை ருசிக்க முடியும்.
"முடிந்த வரை செய்து பார்ப்பது அல்ல முயற்சி, முடியும் வரை செய்து பார்ப்பது தான் முயற்சி" - "விடாமுயற்சியும், கடும் உழைப்புமே வெற்றிக்கு வழி வகுக்கும்" என்கிறார் பேச்சாளரும், திருச்சி மாநகர முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளருமான திரு. கலியமூர்த்தி அவர்கள்.
கல்லூரி விழா ஒன்றில் திரு. கலியமூர்த்தி அவர்கள் தன் வாழ்க்கை அனுபவங்களை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டு ஆற்றிய தன்னம்பிக்கை ஊட்டும் உரை