Wednesday 15 November 2017

செய்து பாருங்கள்: விஆர் ஹெட்செட்



தேவையான பொருட்கள்: 

மொபைல் வைக்கும் சிறு அட்டை பெட்டி ஒன்று, இரண்டு லென்ஸ்கள், லென்ஸ்களை அட்டையில்  ஓட்டுவதற்கு கோந்து, மார்க்கர் பேனா, ரப்பர் பேண்ட்கள், ஒரு ஸ்கேல்.


செய்முறை :
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனின் நீளம், அகலம் ஸ்கேலால் அளந்து கொண்டு, அந்த அளவை அட்டைபெட்டியில்  மார்க்கர் பேனாவால் வரைந்து கொள்ளவும்.  அந்த அளவுக்கேற்ப ஸ்மார்ட்போன் அட்டைபெட்டியின் முன்புறத்தில் ப்ளேடால் வெட்டி கொள்ளவும்.

வெட்டி எடுக்கப்பட்ட அட்டையில் காணொளி காட்சியில் காட்டப்பட்டிருப்பது போல் இரு துளைகள் இட்டு, அந்த துளைகளில் லென்ஸ்களை கோந்து கொண்டு ஒட்டவும்.

ஸ்மார்ட்போன் அட்டைபெட்டியின் பின்புறத்தில், ஏற்கெனவே லென்ஸ்கள் ஒட்டப்பட்ட அட்டையை அளவாக கொண்டு இரு துளைகள் இடவும்.  இப்போது லென்ஸ்கள் ஒட்டப்பட்ட அட்டையை துளையிடப்பட்ட ஸ்மார்ட்போன் அட்டைபெட்டியின் மேல் கோந்து கொண்டு ஒட்டவும்.

உங்கள் ஸ்மார்ட்போனை அட்டைபெட்டியின் முன்புறத்தில் ரப்பர் பேண்டுகள் கொண்டு பொருத்தவும். வி ஆர் ஹெட்செட் தாயாரகிவிட்டது.
--------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்