Wednesday 7 March 2018

வல்லவனுக்கு வல்லவன் - இளைஞனின் சாமர்த்தியம் - # உண்மை சம்பவம்


து ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட், வாடிக்கையாளர்கள் கண்களுக்கு பளிச்சென்று தெரியும் வகையில் வாங்கிய பொருட்களை திரும்ப பெற்று கொள்ளும் வசதி உண்டு என்று அங்கு இருந்த அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டுள்ளது. வீட்டிற்க்கு தேவையான பொருட்களை மொத்தமாக அங்கு வாங்கிய ஒரு இளைஞர் அடுத்த நாள் ஒரு சில பொருட்களை தேவையில்லை என்று திரும்ப கொடுத்து விட்டு செல்ல வந்திருந்தார், சூப்பர் மார்க்கெட்டின் கேஷ் கவுண்டரில் இருந்த நபரிடம் தான் நேற்று வாங்கிய சில பொருட்களை திரும்ப கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தார், ஆனால் சூப்பர் மார்க்கெட் ஊழியரோ நேற்று பொருளை வாங்கியிருந்தால் நீங்கள் நேற்றே பொருளை திரும்ப கொடுத்திருக்க வேண்டும், அப்போது தான் பொருட்களுக்கான பணம் திரும்ப தரப்படும் (இந்த விதிமுறை மிக சிறிய எழுத்துக்களில் அந்த சூப்பர் மார்க்கெட் அறிவிப்பு பலகையிலேயே உள்ளது, சிறிய எழுத்துக்களில் இந்த விதிமுறை உள்ளதால் பலரும் இதை கவனிக்க தவறி விடுகின்றனர்.)  

பொருட்களை வாங்கிய அடுத்த நாள்  பொருட்களை கொடுத்து திரும்ப பணம் பெற முடியாது, வேண்டுமென்றால் அந்த பொருட்களை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அதே பண மதிப்புக்கு வேறு பொருட்களை நீங்கள் வாங்கி கொள்ளலாம் என்று இளைஞரிடம் கூற, அந்த இளைஞர் சில நொடிகள் திகைத்து நின்று விட்டு பின்னர் சூப்பர் மார்க்கெட் ஊழியர் கூறியபடி முதல் நாள் வாங்கிய பொருட்களில் சிலவற்றை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு சில பொருட்களை வாங்கினார். அதன் பின்பு அந்த இளைஞர் சாமர்த்தியமாக ஒரு காரியம் செய்தார். அன்று தான் வாங்கிய பொருட்களை மீண்டும் திரும்ப கொடுத்து இப்போது பணம் கொடுங்கள் என்றார். சூப்பர் மார்க்கெட் ஊழியரின் முகத்தை பார்க்க வேண்டுமே, பொருட்கள் இன்று விற்பனை செய்யப்பட்டிருப்பதால் வேறு வழியின்றி பொருட்களை எடுத்து கொண்டு பணத்தை திரும்ப அந்த இளைஞரிடம் கொடுத்தார். வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு அல்லவா?  


------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்