Wednesday 27 December 2017

2017ஆம் ஆண்டில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த ஐந்து சாதனங்கள்



01-சிஐஒ காந்த சைக்கிள் லைட்:
2005ஆம் ஆண்டு ரிலைட் நிறுவனம் பேட்டரி இல்லாமல் காந்த சக்தி மூலம் இயங்கும் இந்த லைட்டுகளை அறிமுகபடுத்தியது, இதுவரை பத்து மில்லியன் லைட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  டென்மார்க்  நாட்டில் மூன்றில் ஒரு சைக்கிளில் இடம் பிடித்திருக்கும் இந்த லைட் சைக்கிளில் பயணிக்கும் போதெல்லாம் (காலை நேரத்திலும்) எரிந்து கொண்டே இருப்பதால் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கிறது.      

02- ரீஜியட் :
உங்கள் ஸ்மார்ட்போனை கொண்டு நடந்து கொண்டே அதிர்வுகள் இல்லாமல் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க உதவும் செல்பி ஸ்டிக் போல் காட்சியளிக்கும் இந்த ரீஜியட் கருவி ஸ்மார்ட்போனை எந்த கோணத்திலும் திருப்பி வீடியோக்கள் எடுக்க உதவுகிறது. இந்த கருவியை பயன்படுத்தும்போதே சார்ஜ் செய்ய முடிவதால் பல மணி நேரம் வீடியோக்களை தொடர்ந்து லைவ்ஸ்ட்ரீம் செய்யும் வசதியையும் அளிக்கிறது.  ரீஜியட் பயன்படுத்தும்போது எளிதாக போட்டோ மோடிலிருந்து வீடியோவுக்கு மாற்றி கொள்ள ஸ்விட்ச் உள்ளது. 

03- இசட்.டி.ஈ ஸ்ப்ரோ 2: (ஆண்ட்ராய்டு ப்ரோஜெக்டர்)
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள், காணொளி காட்சிகளை பெரிய திரையில் காண உதவும் பாக்கெட் சைஸ் ப்ரோஜெக்டர் கருவி.

04- வியு ஸ்மார்ட் மூக்கு கண்ணாடி:
சாதாரண மூக்கு கண்ணாடி போல் காட்சியளிக்கும் இந்த ஸ்மார்ட் மூக்கு கண்ணாடி டச் வசதி கொண்டுள்ளது.  இந்த கருவியை ப்ளுடூத் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்யேக ஆப்பில் இணைத்துவிட்டால் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளையும் வழங்குகிறது, சிறிய மைக்ரோபோன், ஸ்பீக்கர் மூலம் பாடல்கள் கேட்பது, நண்பர்களுடன் சாட் செய்வது, புகைப்படம் எடுப்பது, நேரத்தை சொல்வது என்று இதன் பயன்பாடுகள் மிக அதிகம், வயர்லஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ள இந்த கருவியை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

05- நிகோ 360:
உலகின் மிகச்சிறிய 360 டிகிரி கேமராவான நிகோ 360 கொண்டு 1440 பிக்சல் WQHD தரத்தில் புகைப்படங்கள், காணொளி காட்சிகள் எடுக்க முடியும், வைபை வசதி மற்றும் விஆர் வசதி கொண்டுள்ள இந்த கேமராவில் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளதால் தண்ணீரில் விழுந்தாலும் சேதமாகாது.    

--------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்