Wednesday 17 January 2018

சில்லா மேரி ஆராக் - விவசாய புரட்சி செய்யும் இளம் சாதனையாளர்


காண்டா நாட்டை சேர்ந்த சில்லா மேரி ஆராக் 2017ஆம் ஆண்டின் இளம் சாதனையாளர் விருதை வேளாண்மை மற்றும் வேளாண்-செயலாக்கத்திற்கான பிரிவில் வென்றுள்ளார், விவசாயத்தை அதிகம் ஆதரிக்காத பகுதியில் வசிக்கும் இவர் விவசாய துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு இந்த சாதனையாளர் விருதை பெற்றிருப்பது மிகுந்த ஆச்சரியத்தையும், விவசாயம் செய்து வரும் பலருக்கு தொடர்ந்து விவசாய துறையில் ஆர்வத்துடன் ஈடுபட ஊக்கம் அளித்துள்ளது.   

2015ஆம் ஆண்டு துவங்கி இரண்டு வருடங்களாக இயங்கி வரும் அகோரியன் டெக்னாலஜிஸ் (விவசாய துறை சார்ந்த நிறுவனம்) நிறுவனத்தின் துணை நிறுவனர் சில்லா மேரி ஆராக்.  தற்போது இந்த நிறுவனம் 22 முழு நேர பணியாளர்களையும், 460 தற்காலிக ஊழியர்களையும் கிராம முகவர்களாக பயன்படுத்துகிறது, இது உகாண்டாவில் உள்ள 60,000 சிறு விவசாயிகளுக்கு தகவல் அளிப்பதன் மூலம் சேவைகளை வழங்குகின்றது. தகவல் தொழில்நுட்ப துறையின் அபரிதமான வளர்ச்சியை விவசாய துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தி வரும் அகோரியன் நிறுவனம் கிராம முகவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கி அதன் மூலம் அவர்கள் சந்திக்கும் விவசாயிகளின் விளைநிலங்கள் இருக்கும் பகுதியை ஜி.பி.எஸ் வசதி மூலம் அறிந்து கொண்டு அந்த நிலப்பகுதியில் உள்ள மண்ணின் தன்மை மற்றும் பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப விவசாய துறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கி விவசாயிகளுக்கு உதவி வருகிறது. 

ஊருக்கெல்லாம் சோறு போடும் விவசாயத்தை மறந்து விட்டு நம் நாட்டில் உள்ள இளம் தலைமுறையினர் பலர் ஐ.டி துறை பக்கம் பார்வையை திருப்பி வரும் நிலையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி விவசாய துறையில் புரட்சி செய்து வரும் சில்லா மேரி ஆராக்கின் சாதனை பாராட்டப்பட வேண்டிய ஒன்று தானே? 
------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்