Thursday 5 April 2018

இளைய தலைமுறையை கவரும் எல்இடி விளக்குகள் ஒளிரும் ஸ்மார்ட் டி-ஷர்ட்



க்கால இளைஞர்கள் எல்லா விஷயங்களிலும் புதுமையை விரும்புகின்றனர், அவர்கள் விருப்பத்தை புரிந்து கொண்டு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் வெற்றி அடைகின்றன, பல கல்லூரிகளில், சில அலுவலகங்களிலும் கூட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டி- ஷர்ட்கள் அணிய தடை உள்ளது, அப்படி தடை செய்திருந்தாலும் இந்த டி ஷர்ட் அணிந்து சென்றால் எந்த பிரச்சினையும் வராது, ஏனென்றால் இந்த டி சர்ட்டில் எழுத்துக்கள் பதிப்பிக்க படுவதில்லை மாறாக நாம் விரும்பும் போது டி ஷர்ட்டில் உள்ள லோகோவை அழுத்தினால் எழுத்துகள், ஓவியங்கள், உருவங்கள் எல்இடி விளக்குகள் கொண்டு ஒளிர்கிறது. அதே சமயம் இந்த டி ஷர்ட்டில் நாம் விருப்பதிற்கேற்ப எழுத்துக்கள், ஸ்லோகன்கள், அனிமேஷன் உருவங்கள் போன்றவற்றை எழுதியும், வரைந்தும் பயன்படுத்தும் வசதி உள்ளது.


ஹைதராபாத் நகரை சேர்ந்த பிராட்காஸ்ட் என்ற நிறுவனம் இந்த எல்இடி விளக்குகள் ஒளிரும் டி- ஷர்ட்களை தயாரித்துள்ளது. ஒரு மின்னணு சர்க்யூட்போர்ட், மிக சிறிய எஸ்.எம்.டி வகை எல்இடி விளக்குகள், ரீசார்ஜ் செய்து பயன்படுத்தகூடிய பேட்டரி இவற்றுடன் உங்கள் ஸ்மார்ட்போனுடன் தொடர்பு கொள்வதற்கு ப்ளூடூத் சிப் போன்றவை தான் இந்த டி ஷர்ட்களை ஒளிர செய்கிறது. சாதாரண எல்இடி விளக்குகள் கணம் அதிகமாய் இருக்குமென்பதால் மிக சிறிய அதிக கணமில்லாத எஸ்.எம்.டி வகை எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. டி ஷர்ட் துணியில் இந்த மின்னணு சர்க்யூட் போர்ட் மற்றும் எல்இடி விளக்குகள் ஒரு விசேஷமான ரசாயண கலவையுடன் சேர்த்து சால்டர் செய்து இணைக்கப்பட்டுள்ளது. ஆறு மணி நேரம் வரை எல்இடி விளக்குகள் ஒளிரும் வகையில் 1500 எம்ஏஹச் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. ஒரு டி ஷர்ட்டில் சராசரியாக 8௦௦ எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது. 
  


எல்இடி விளக்குகள் ஒளிரும் இந்த டி ஷர்ட்டை அணிந்து கொண்டு தண்ணீரில் நனைந்தாலும் கவலைப்பட தேவையில்லை. வாட்டர் ப்ரூப் கொண்டுள்ளது. ஒரு சாதாரண டி ஷர்ட்டை எப்படி பயன்படுத்துவீர்களோ, அதே போல் இந்த ஸ்மார்ட்  டி-ஷர்ட்டையும் பயன்படுத்தலாம்.  

எப்படி பயன்படுத்துவது?
உங்கள் ஸ்மார்ட் போனில் இலவசமாக கிடைக்கும் பிராட்காஸ்ட் வியர் (ஆப்) செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவி கொள்ளவும். ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள செயலியை டி ஷர்ட்டுடன் இணைக்கவும், பின்னர் நீங்கள் விரும்பும் எழுத்துக்கள் வடிவங்களை ஸ்மார்ட்போன் செயலியில் எழுதினாலும், வரைந்தாலும் அது அப்படியே டி சர்ட்டில் உள்ள எல்இடி விளக்குகள் மூலம் ஒளிரும். 

தினமும் ஒரே வாசகம் எழுதப்பட்ட டி சர்ட்டை அணிந்தால் போரடிக்கும் என்று நினைப்பவர்கள், இந்த ஸ்மார்ட் எல்இடி டி சர்ட்டில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பும் வாசகத்தை எழுதி பயன்படுத்தலாம் என்கிறார் பிராட்காஸ்ட் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஐயப்பா நகுபந்தி.          

இளைய தலைமுறையினரிடம் ஸ்மார்ட் எல்இடி டி ஷர்ட்டிற்கு கிடைத்த வரவேற்ப்பை பார்த்து,   தற்போது    இந்த    நிறுவனம்     தங்களது    அடுத்த  தயாரிப்பான ஃபிட்னஸ் டி- ஷர்ட் தயாரித்து விற்பனை செய்ய துவங்கியுள்ளது. 

------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்